×

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரின் துணைவியார் 24ம் ஆண்டு நினைவு தினம்

பெரம்பலூர், ஜூலை 21: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 24ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் – துறையூர் சாலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையாரின் நினைவிடத்தில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் துணைத்தலைவரும், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏவுமான சீ.கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் நிவானி கதிரவன், செயலர் நீலராஜ், இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், புது நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி நீலராஜ், மண்ணச்சநல்லூர் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தனலட்சுமி கல்விக்குழும பள்ளி, கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரின் துணைவியார் 24ம் ஆண்டு நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : Thanalakshmi Srinivasan University ,Perambalur ,Thanalakshmi Ammaiyar ,A. Srinivasan ,Chancellor ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...